புதிய ஜேம்ஸ் பாண்ட் படத்துக்குப் பெயர் ஸ்பெக்டர்... நவம்பர் 2015-ல் ரிலீஸ்!

|

புதிய ஜேம்ஸ்பாண்ட் படத்தின் பெயர், நடிகர் நடிகைகள் மற்றும் கலைஞர்கள் விவரம் சற்று முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

டேனியல் க்ரெய்க் நடிக்கும் இந்தப் படத்துக்கு ஸ்பெக்டர் என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

இதனை ஸ்கைபால் படத்தை இயக்கிய சாம் மெண்டிஸ் இயக்குகிறார்.

புதிய ஜேம்ஸ் பாண்ட் படத்துக்குப் பெயர் ஸ்பெக்டர்... நவம்பர் 2015-ல் ரிலீஸ்!

இந்தப் படத்தில் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார் பிரபல கவர்ச்சி நாயகி மோனிகா பெல்லுச்சி.

பிரதான வேடங்களில் ஆன்ட்ரூ மார்ட்டின், டேவ் பாடிஸ்டா, லீ ஸீடெக்ஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஜேம்ஸ் பாண்ட் படங்களில் அவர் பயன்படுத்தும் கார்களுக்கு முக்கியப் பங்குண்டு. இந்தப் படத்தில் ஆஸ்டன் மார்டின் டிபி10 மாடல் காரை ஜேம்ஸ் பாண்ட் பயன்படுத்தவிருக்கிறார்.

லண்டன் பைன்வுட் ஸ்டுடியோ, மெக்சிகோ சிட்டி, ரோம், மொராக்கோ, ஆஸ்திரியா உள்பட உலகின் பல நாடுகளில் படப்பிடிப்பை நடத்தவிருக்கிறார்கள்.

அடுத்த ஆண்டு நவம்பர் 6-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது ஸ்பெக்டர்!

24வது ஜேம்ஸ்பாண்ட் படம் ஸ்பெக்டர்

 

Post a Comment