மொசக்குட்டி படம் எப்படி போகுது? சென்னையில் விளக்கிப் பேசிய படக் குழு

|

சென்னை: கோலிவுட்டில் புதிதாக வெளிவந்துள்ள மொசக்குட்டி படத்தின் தொழில்நுட்பக்கலைஞர்கள் கலந்து கொண்ட பிரஸ் மீட் சென்னையில் நடைபெற்றது.

தமிழில் லேட்டஸ்டாக வந்துள்ள படம் மொசக்குட்டி. வீரா என்ற புதுமுகம் ஹீரோவாக நடித்துள்ளார். அவரது கதாபாத்திரத்தின் பெயர்தான் மொசக்குட்டி என்பதாகும்.

மொசக்குட்டி படம் எப்படி போகுது? சென்னையில் விளக்கிப் பேசிய படக் குழு

சும்மாச் சொல்லக் கூடாது. புதுமுகம் என்று தெரியாத அளவுக்கு நன்றாகவே நடித்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் மகிமா படத்தின் இன்னொரு சிறப்பு. சிறப்பாக நடித்திருக்கிறார். அழகாக வந்து அளவாக நடித்திருக்கிறார்.

படம் முழுக்க வீராவுடன் வலம் வருகிறார் செண்ட்ராயன். ஒரு சில இடங்களில் ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். முந்தைய படங்கலில் வந்த சென்ட்ராயன் போல இல்லாவிட்டாலும் கூட முதலுக்குமோசமில்லை என்ற ரகத்தில் இருக்கிறது அவரது நடிப்பு இப்படத்தில்.

ஜோமல்லூரி, விருமாண்டி என்னும் கதாபாத்திரத்தில் மிடுக்கான நடிப்பால் மிளிர்கிறார். இடைவேளைக்குப்பின் வரும் பசுபதியின் நடிப்பு அருமை.

மொசக்குட்டி படம் எப்படி போகுது? சென்னையில் விளக்கிப் பேசிய படக் குழு

வழக்கமான காதல் கதையை வித்தியாசமான திரைக்கதை மூலம் ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் ஜீவன். இப்படத்திற்கு இசை ரமேஷ் விநாயகம். ஒளிப்பதிவு சுகுமாறன்.

பத்திரிகையாளர் சந்திப்பின்போது படக்குழுவினர் படம் குறித்த பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.

 

Post a Comment