பேய்ப் படங்கள் எடுக்க ஆசைப்படும் பிரபு தேவா

|

பிரபுதேவாவுக்கு இப்போது புது ஆசை வந்திருக்கிறது. ஒரு பேய்ப்படம் எடுக்க வேண்டும் என்பதுதான் அந்த ஆசை.

அஜய் தேவ்கான்- சோனாக்சி சின்ஹாவை வைத்து ஆக்சன் ஜாக்சன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த டிசம்பர் மாதம் அந்தப் படம் வெளியாகிறது.

தங்கர்பச்சான் இயக்கத்தில் அவர் எப்போதோ நடிக்க ‘களவாடிய பொழுதுகள்' படமும் விரைவில் வெளியாகவிருக்கிறது.

பேய்ப் படங்கள் எடுக்க ஆசைப்படும் பிரபு தேவா

இந்த நிலையில் பேய் படங்கள் இயக்க பிரபுதேவா முடிவு செய்துள்ளார். தமிழ் பட உலகில் பேய் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், அதே பாணியில் தமிழ், இந்தியில் படங்கள் இயக்க முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து பிரபுதேவா கூறும்போது, ‘‘நான் ஆக்ஷன் படங்களையும் காமெடி படங்களையும் எடுத்திருக்கிறேன். அடுத்து ‘திகில்' நிறைந்த பேய் படம் எடுக்க முடிவு செய்துள்ளேன். முதலில் அப்படியொரு படத்தை இந்தியில் தரப் போகிறேன். அடுத்து தமிழில்," என்றார்.

தமிழில் ஹிட்டடித்த ஏதாவது ஒரு பேய்ப் படம் விரைவில் இந்தி பேசக்கூடும் என்று தெரிகிறது.

 

Post a Comment