ஒரே மாசத்தில் குண்டாவது எப்படி...? கணேஷ்கர் - ஆர்த்தி தரும் டிப்சை கேளுங்க!

|

சென்னை: குறைந்த கால அளவில் எளிதாக குண்டாவது எப்படி என காமெடி நடிகர்களான கணேஷ்கர், ஆர்த்தி தம்பதி டிப்ஸ் கொடுத்துள்ளனர்.

தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிறுவயது முதல் இணைந்து காமெடியில் கலக்கியவர்கள், தற்போது திருமண பந்தத்திலும் இணைந்து வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இருவேறு கட்சிகளில் இருவரும் அங்கம் வகித்த போதும், குடும்ப வாழ்க்கைக்குள் அரசியலை நுழைய விடாமல் தடுத்து சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர்.

பொதுவாக எளிய வகையில் விரைவில் ஒல்லியாவது எப்படி என யோசித்துக் கொண்டிருக்க, சீக்கிரமாக குண்டாவது எப்படி என டைம்பாஸ் வார இதழுக்கு பேட்டி அளித்துள்ளனர் கணேஷ்கர் - ஆர்த்தி ஜோடி.

ஒரே மாசத்தில் குண்டாவது எப்படி...? கணேஷ்கர் - ஆர்த்தி தரும் டிப்சை கேளுங்க!

அப்பேட்டியில் அவர்கள் கூறியுள்ளதாவது :-

ஆர்த்தியின் பதில்...

குண்டா இருக்கறது தான் என்னோட பிளஸ் பாயிண்ட். பலபேர் டயட்ங்கிற பேர்ல ஒரே ஒரு டம்ளர் தண்ணியை மட்டும் குடிக்கிறாங்க. அவங்களையெல்லாம் பார்த்தா பாவமா இருக்கு.

ஆரோக்கியம் தான் முக்கியம்...

அவங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்றேன். ஒல்லியா இருக்கிறோமோ, குண்டா இருக்கிறோமோ, ஆரோக்கியமா இருக்கணும். அவ்வளவு தான்.

சந்தோஷமா இருங்க...

மத்தபடி, மனசுல எந்தக் கவலையும் வெச்சுக்காம சந்தோஷமா இருங்க, பிடிச்சதை சாப்பிடுங்க. நீங்களும் என்னை மாதிரி குண்டாகிடுவீங்க' எனப் பதிலளித்துள்ளார்.

இது தான் டின்னர்...

இதே கேள்விக்கு கணேஷ்கர் பதில் கூறுகையில், ‘அது சப்ப மேட்டருங்க. ஒன்றரை கிலோ பர்த்டே கேக், 5 நேந்திரம் பழம் இது இரண்டையும் தினசரி ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடி சாப்பிடுங்க.

நிச்சயமா குண்டாகிடலாம்...

ஒரே மாசத்துல நிச்சயமா குண்டாகிடலாம். ஒரு காலத்துல நான் அப்படித்தான் பண்ணினேன்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Post a Comment