வித்தியாசமான பிறந்தநாள்.. வாழவைத்த தெய்வங்களான ரசிகர்களுக்கு நன்றி! - ரஜினி அறிக்கை

|

சென்னை: இது என் வாழ்க்கையில் வித்தியாசமான பிறந்த நாள். என்னை வாழவைத்த தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கு நன்றி என்று தன் கைப்பட கடிதம் எழுதி நன்றி தெரிவித்துளளார் ரஜினிகாந்த்.

வித்தியாசமான பிறந்தநாள்.. வாழவைத்த தெய்வங்களான ரசிகர்களுக்கு நன்றி! - ரஜினி அறிக்கை

ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதியை உலக ஸ்டைல் தினமாகக் கொண்டாடினர் அவரது ரசிகர்கள். தமிழகம், இந்தியா தாண்டி, உலகின் பல்வேறு நாடுகளிலும் ரஜினி பிறந்த நாளைக் கொண்டாடினர். லட்சக்கணக்கான கேக்குகள் வெட்டப்பட்டன.

நேற்று ரஜினி நடித்த லிங்காவும் வெளியாகி, பெரும் வரவேற்புடன் ஓடிக் கொண்டுள்ளது.

தனக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொன்ன, தனக்காக வேண்டிக் கொண்ட, பிறந்த நாள் கொண்டாடிய அனைத்து ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அவரே கைப்பட எழுதிய அந்தக் கடிதம்:

வித்தியாசமான பிறந்தநாள்.. வாழவைத்த தெய்வங்களான ரசிகர்களுக்கு நன்றி! - ரஜினி அறிக்கை

இந்த 12.12.14 என் வாழ்க்கையில் மறக்க முடியாத பிறந்த நாள். இந்நாளில் என்னை வாழ்த்திக் கொண்டிருக்கும் என்னை வாழ வைத்த தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, அவர்கள் என்றும் நலமோடு வாழ இந்நாளில் இறைவனை வேண்டுகிறேன்.

அன்புடன்
ரஜினிகாந்த்

-இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

Post a Comment