விஜய் டிவியின் பேக் டூ ஸ்கூல் நிகழ்ச்சியில் பங்கேற்று விளையாடிய குஷ்பு நூற்றுக்கு 61 மார்க்குகள் எடுத்து பர்ஸ்ட் கிளாசில் பாஸ் செய்தார். ஆனாலும் வருத்தம்தானம் அவருக்கு. பள்ளியில் படிக்கும் போது 80,90 மார்க் எடுப்பாராம். இப்போது மார்க் குறைந்துவிட்டது என்று வருத்தப்பட்டார் குஷ்பு.
நீயா நானா கோபிநாத் ஞாயிறு இரவுகளில் பெரியவர்களுடன் மல்லுக்கட்டினால், பகல் பொழுதுகளில் குட்டி சுட்டி குழந்தைகளுடன் பள்ளிப் பாடம் எடுக்கிறார்.
பேக் டூ ஸ்கூல் என்ற இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகளுடன் பிரபலங்களும் பங்கேற்று விளையாடுகின்றனர். விளையோட்டோடு மட்டுமல்லாது கூட்டல், கழித்தல், வகுத்தல் கணக்கெல்லாம் போடவேண்டும்.
இந்த வார பேக் டூ ஸ்கூல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக குஷ்பு பங்கேற்று விளையாடினார். மும்பையில் குஷ்பு படித்த பள்ளி வகுப்பறைகளை கண் முன் கொண்டுவந்த விஜய் டிவி, குஷ்புவின் ஆசிரியரின் பேட்டியையும் ஒளிபரப்பியது.
இந்த நிகழ்ச்சி தனது பள்ளி பருவத்தை நினைவூட்டியது என்று மகிழ்ச்சியடைந்தார் நிகழ்ச்சியில் பங்கேற்ற குஷ்பு.
ஜெயிப்பேனோ தோற்பேனோ தெரியாது ஆனால், பள்ளிகளில் நடைபெறும் விளையாட்டு, பாட்டு, நடனம் என அனைத்து போட்டிகளிலும் பங்கேற்பேன் என்றார் குஷ்பு.
சினிமா, அரசியல், தொலைக்காட்சி சீரியல் தயாரிப்பாளர் என பலவித முகங்கள் கொண்ட குஷ்பு, கேம்ஷோவிலும் பங்கேற்று உற்சாகமாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment