ஈராஸ் நிறுவனம் வாங்கியதாக முதலில் அறிவிக்கப்பட்ட அஜீத்தின் என்னை அறிந்தால் பட இசை வெளியீட்டு உரிமையை, இப்போது சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
ஈராஸின் தென்னகத் தலைவராக சௌந்தர்யா ரஜினி பொறுப்பேற்ற பிறகு, அந்த நிறுவனம் இசை வெளியீட்டு உரிமைகளைப் பெறுவதிலும், பெரிய படங்களின் வெளியீட்டு உரிமைகளை வாங்குவதிலும் தீவிர கவனம் செலுத்தினார்.
சவுந்தர்யா பொறுப்பேற்ற பிறகு முதலில் வாங்கியது கத்தியின் இசை உரிமையைத்தான். அடுத்து தன் தந்தை ரஜினி நடித்த லிங்கா படத்தின் இசையை வாங்கினார்.
அதன் பிறகு அஜீத்தின் என்னை அறிந்தால் இசை உரிமையையும் சவுந்தர்யா மூலம் ஈராஸ் வாங்கியதாகக் கூறப்பட்டது. ஆனால் இப்போது சோனி நிறுவனம் அந்த உரிமையை தட்டிச் சென்றுள்ளது.
இதனை சோனி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
சோனி மியூசிக் - ஹாரிஸ் ஜெயராஜுடன் நெருக்கமான நட்பு வைத்துள்ளதால், சோனிக்கே இசை உரிமையைத் தரவேண்டும் ஹாரிஸ் ஜெயராஜ் விரும்பினாராம். இதனாலேயே டீல் கை மாறிவிட்டதாகக் கூறுகிறார்கள்.
Post a Comment