சென்னை: கோலிவுட்டில் புதிதாக துவங்க இருக்கும் "என்னுள் நீ" என்ற திரைப்படத்தின் தொடக்க விழா மற்றும் பூஜை சென்னையில் நேற்று நடைபெற்றது.
இப்படத்தில் புதுமுகமான ஜூகேஸ் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இப்படத்தில் இவருக்கு இரண்டு கதாநாயகிகள். ஐஸ்வர்யா தத்தா மற்றும் மிருதுளா விஜய் ஆகிய இரண்டு இளம் புதுமுகங்கள் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளனர்.
இப்படத்தினை விக்டர் இம்மானுவேல் தயாரித்து வெளியிட இருக்கின்றார். இப்படத்தினை கே.சி.குமரேஷ் இயக்க உள்ளார்.
என்னுள் நீ என்னும் இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் இசையமைக்க உள்ளார்.
படத்தின் ஸ்டில்களைப் பார்த்தாலே "பயமாக" இருக்கிறது.. படம் எப்படி இருக்குமோ!
Post a Comment