நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடிப்பில் தனி இடம் பிடித்த நடிகர் தேவன் வர்மா நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 77.
தேவன் வர்மாவுக்கு சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு கிட்னி செயல் இழந்தது. நேற்று திடீரென மாரடைப்பும் ஏற்பட்டது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி மரணம் அடைந்தார்.
தேவன்வர்மா இந்தி பட உலகில் முன்னணி நடிகராக இருந்தார். குணசித்திர வேடங்களிலும், காமெடி கேரக்டர்களிலும் நடித்து உள்ளார். ஆங்கூர் சோரி மேரா காம், அந்தஸ் அப்னா அப்பா, ஜுதாயி, தில் தோ பாகல் ஹை, கோரா கஹல் போன்ற படங்களில் தேவன்வர்மா நடிப்பு பேசப்பட்டது.
தேவன் வர்மா மறைவுக்கு நடிகர் அமீர்கான் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, "தேவன் வர்மா மறைவுச் செய்தி கேட்டு துயரமுற்றேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தேவன் வர்மா சிறந்த நடிகர். அவருடன் நடித்தது மறக்க முடியாத நினைவுகள் என்றும் கூறினார்.
Post a Comment