மும்பை: பாலிவுட் உலகின் புதிய வரவான "பிகே" திரைப்படம் உலக அளவிலான பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் 150 கோடியை நெருங்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில் ஒரே ஒரு பகுதியில் மட்டும் "லிங்கா" திரைப்படத்துடன் போட்டி போட இயலாமல் தவித்து வருகின்றது. அந்த நாடு "மலேசியா".
மலேசியாவில் முதல் வாரத்தில் இப்படம் வெறும் 8 லட்சத்தினை மட்டுமே குவித்துள்ளது. பல்வேறு தரப்பினரும் மலேசியாவில் "பிகே" திரைப்படம் எவ்வளவு வசூலைக் குவிக்கிறது என்ற எதிர்பார்ப்புடன் இருந்து ஏமாற்றத்தில் ஆழ்ந்து போயுள்ளனர்.
ஆனால், பிகேவால் லிங்கா திரைப்படத்தினை மீறி திரையில் ஜொலிக்க முடியவில்லை. முதல்வாரத்திலேயே லிங்கா திரைப்படம் 2.26 கோடி வசூலைக் குவித்தது.
மலேசியாவில் அதிக அளவில் இருக்கும் தமிழ் மக்களால் தமிழ்ப்படங்கள் அங்கு கொடிகட்டி பறக்கின்றன. ஆனால், பாலிவுட் படங்களின் ஓட்டம் என்னவோ கொஞ்சம் கம்மிதான்.
மலேசியாவினைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் நல்ல வசூலைத்தான் குவித்துள்ளது. 600 திரைகளில் ரிலீசான அமீர்கானின் பிகே திரைப்படம் எல்லா தரப்பினராலும் பெரிதும் ரசிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் முதல் வாரத்திலேயே 47.6 கோடி ரூபாய் வசூலினைக் குவித்துள்ளது பிகே. வருகின்ற வாரங்களில் மற்ற எல்லா வசூல் சாதனைகளையும் இப்படம் முறியடிக்கும் எனத் தெரிகின்றது.
ராஜூ ஹிரானியால் தயாரித்து இயக்கப்பட்டுள்ள இப்படத்தில், அமீர்கான் மற்றும் அனுஷ்கா சர்மா கதை நாயகன்,நாயகியாக நடித்துள்ளனர்.
Post a Comment