விஜய் படத்தைத் தயாரிக்க நான் தயாராக உள்ளேன். அவர் எப்போது சரி என்று சொன்னாலும் படம் உடனே தொடங்கிவிடும், என்றார் நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின்.
விஜய் சினிமா உலகத்திற்கு வந்து 22 ஆண்டு கடந்து விட்டது. இதை விஜய்யின் ரசிகர்கள், திரையுலகத்தினர் கொண்டாடி வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதற்காக விஜய், தன்னை வைத்து இயக்கிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், தன்னுடை நடித்த நடிகர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
இதில் பெரிய தயாரிப்பாளர்கள் பட்டியலில் உதயநிதி ஸ்டாலினும் ஒருவர். பாரம்பரிய தயாரிப்பாளர்கள் மத்தியில் உதயநிதி ஸ்டாலின் முதன்மையானவராக விஜய் கூறியுள்ளார். உதயநிதியை தயாரிப்பாளராக அறிமுகப்படுத்தியவரே விஜய். இவருடைய நடிப்பில் வெளியான ‘குருவி'தான் உதயநிதியின் முதல் தயாரிப்பு. அந்தப் படம் 100 நாட்கள் ஓடி வெற்றி விழா கொண்டாடியது.
விஜய்யை வைத்து மீண்டும் எப்போது படம் தயாரிக்க போகிறீர்கள் என்று உதயநிதியிடம் கேட்டதற்கு, "விஜய் எப்போது தேதி தருகிறாரோ அப்போது படம் தயாரிப்பேன். நாளையே தேதி தந்தாலும் படம் தயாரிக்க நான் தயார்," என்றார்.
தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் நடித்து வரும் விஜய், இப்படத்திற்குப் பிறகு அட்லி படத்தில் நடிக்கிறார். அதன்பிறகு கே.வி.ஆனந்த் படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது. இந்தப் படங்களுக்குப் பிறகுதான் அவர் உதயநிதிக்கு கால்ஷீட் தரவிருக்கிறார்.
Post a Comment