மும்பை: நம் நாட்டின் குடியரசுத் தலைவர் நரேந்திர மோடி என்று இந்தி நடிகை கரிஷ்மா தன்னா பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடத்தி வரும் டிவி ரியாலிட்டி ஷோ பிக் பாஸ். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் நடந்து வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்தி நடிகை கரிஷ்மா தன்னா கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த வார நிகழ்ச்சியின்போது சல்மான் பிக் பாஸ் போட்டியாளர்களின் பொது அறிவை சோதிக்க பல்வேறு கேள்விகள் கேட்டார். அப்போது நம் நாட்டின் குடியரசுத் தலைவர் யார் என்ற கடினமான கேள்வியை சல்மான் கேட்டார். அதற்கு கரிஷ்மா நரேந்திர மோடி என்று பதில் அளித்து அனைவரையும் வியக்க வைத்தார். அவருக்கு நம் நாட்டின் பிரதமர் யார், குடியரசுத் தலைவர் யார் என்றே தெரியாததை பலரும் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகிறார்கள்.
முன்னதாக காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை ஆலியா பட் நம் நாட்டின் குடியரசுத் தலைவர் யார் என்ற கேள்விக்கு முன்னாள் மகராஷ்டிரா முதல்வர் பிரித்விராஜ் சவானின் பெயரை தெரிவித்தார்.
பொது அறிவில் ஆலியா தான் ஞானசூனியம் என்றால் கரிஷ்மா அவருக்கு மேல் உள்ளார் என ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
Post a Comment