ஜாதகம், ஜோதிடம் பார்த்து வாய்ப்புகளை கோட்டை விட்ட நடிகர் ரீஎன்ட்ரி

|

சென்னை: ஹாலிவுட்டில் உள்ள மையத்தில் நடிக்க பயிற்சி எடுத்து வந்த அந்த 3 எழுத்து ஹீரோவுக்கு பல ஆண்டுகள் கழித்து தற்போது தான் பட வாய்ப்பு வந்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த பெயரில் உயிரை வைத்திருக்கும் அந்த 3 எழுத்து நடிகர் பல்கலைக்கழக மாணவராக கோலிவுட் வந்தார். சிங்கத்துடன் பள்ளியில் படித்த அவர் ஹீரோ தவிர வில்லன் கதாபாத்திரங்களிலும் கலக்கினார். அவரை தேடி வாய்ப்புகளும் வந்தது. ஆனால் அவரோ ஜோதிடம், ஜாதகம் என்று பார்த்து பார்த்தே வந்த வாய்ப்புகளை எல்லாம் தட்டிக்கழித்தார்.

5 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க வந்துள்ள சிங்கத்தின் தோஸ்த்

சில காலம் பார்த்த கோலிவுட்காரர்கள் ஆமாம் இவரை நடிக்க அழைத்தால் ரொம்பத் தான் செய்கிறார் என்று அவரை விட்டு விலகினர். விளைவு நடிகர் சுமார் 5 ஆண்டுகளாக பட வாய்ப்புகளே இல்லாமல் இருந்தார்.

இந்நிலையில் தான் அவர் விலங்கின் பெயர் கொண்ட படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இனியாவது ஜோதிடம், ஜாதகம் என்று பார்த்து படங்களை ஒதுக்காமல் இருந்தால் தான் பிழைக்க முடியும் என்பதை அவர் உணர வேண்டும்.

அவர் தற்போது நடித்து வருவது காதலை நகைச்சுவையுடன் சொல்லும் படமாம்.

 

Post a Comment