சென்னை: இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளால் அவர் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்.
'வாகை சூடவா' படத்தில் 'சர சர சார காத்து' என்ற பாடல் மூலம் பரிச்சயம் ஆன இவர், உலக நாயகன் கமல்ஹாசன் விஸ்வரூபம் 2, உத்தமவில்லன், பாபநாசம் ஆகிய மூன்று படங்களிலும் இசையமைத்துள்ளார். இந்த மூன்று படங்களுமே ரிலீசுக்கு காத்திருக்கின்றன.
கமலின் மூன்று படங்களுக்கு இசை அமைத்துள்ளதன் மூலம் தென்னிந்தியாவின் முதல்தர இசை அமைப்பாளர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார். சமீபத்தில் ஜிப்ரான் இசையில் வெளிவந்த 'ரன் ராஜா ரன்' படத்தை தொடர்ந்து தெலுங்கில் அவருக்கு நல்ல பெயர் ஈட்டியதோடு, பல்வேறு பெரிய படங்களுக்கும் இசை அமைக்க வாய்ப்பு வருகிறதாம்.
இதற்கெல்லாம் மகுடம் சூடியதை போல் அவருக்கு மேலும் ஒரு நற்செய்தி. நேற்றிரவு அவர் தந்தை ஸ்தானத்துக்கு உயர்ந்தார். சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் நேற்றிரவு அவர் மனைவி ஒரு ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
'இது என் வாழ்வில் மறக்க முடியாத நாள். ஒரு தந்தை என்ற ஸ்தானத்துக்கு உயர்வது எனக்கு மிக பெருமை. தாயும் சேயும் இருவருமே நலம் என்று செய்தியாளர்களிடம் இந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார் ஜிப்ரான்.
இந்த தருணத்தில் 'உத்தம வில்லன்' படத்துக்காக பல்கேரியாவில் சிம்போனி இசை குழுவுடன் பாடல் பதிவு செய்ததையும், அதன் தொடர்ச்சியாக சர்வதேச பேராமவுண்ட் ஸ்டுடியோ அரங்கில் புகழ் பெற்ற ஒலிப்பதிவுக் கூடத்தில் இசைகோர்ப்பு பணியை செய்தேன் என்றும் கூறியுள்ளார் ஜிப்ரான்.
Post a Comment