கேக் மிக்ஸிங்கில் அசத்திய வைஷாலி, விஜிதா!

|

சென்னை: சென்னையில் நடந்த கிறிஸ்துமஸ் கேக் மிக்ஸிங் நிகழ்ச்சியில் நெருங்கி வா முத்தமிடாதே புகழ் நடிகை வைஷாலி, பாடகி விஜிதா கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மிக்ஸிங்கில் பங்கேற்றனர்.

கேக் மிக்ஸிங்கில் அசத்திய வைஷாலி, விஜிதா!

இப்போது ஸ்டார் ஹோட்டல்களில் கேக் மிக்ஸிங் களை கட்டியுள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கான கே தயாரிப்புக்கான மிக்ஸிங்கை விழா போல தற்போது கொண்டாடி வருகின்றனர். இதில் நடிகர், நடிகையர் உள்பட பிரபலங்களை அழைத்து மிக்ஸிங்கை நடத்துவது பேஷனாகி விட்டது.

அந்த வகையில் அம்பிகா எம்பயர் ஹோட்டலில் ஒரு மிக்ஸிங் நடந்தது. அதில் கிறிஸ்துமஸ் கேக் மிக்ஸிங் நடந்தது. இதில், நடிகை வைஷாலி கலந்து கொண்டார். இவர் சென்னையில் ஒரு நாள், புலிவால், பாண்டியநாடு, நெருங்கி வா முத்தமிடாதே உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். அதேபோல பின்னணிப் பாடகி விஜிதா கணேசனும் இதில் கலந்து கொண்டார்.

 

Post a Comment