சென்னை: லீடர் நடிகர் தற்போது நடித்து வரும் படத்தில் 2 ஹீரோயின்களை விட அம்மாவாக நடிக்கும் மயிலுக்கு அதிக சம்பளமாம்.
லீடர் நடிகர் தற்போது ஒரு பேன்டஸி படத்தில் நடித்து வருகிறார். இதற்காக சென்னையில் பிரமாண்ட தர்பார் செட் அமைத்துள்ளனர். படத்தில் புஸு புஸு நடிகை, நடிப்பு, இசை, பாட்டு என்று மூன்று துறைகளில் கலக்கும் வாரிசு நடிகை என இரண்டு ஹீரோயின்கள். இந்த படத்தில் பல ஆண்டுகள் கழித்து மயிலு நடிகை நடிக்கிறார்.
பாலிவுட்டில் செட்டிலாகி இந்தி பட தயாரிப்பாளரை திருமணம் செய்து, குழந்தைகளுடன் மும்பையில் வசித்து வரும் அவர் தற்போது மீண்டும் கோலிவுட் வந்துள்ளார். அவர் 30 நாட்களுக்கு மேல் கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.
படத்தில் நடிக்கும் 2 ஹீரோயின்களை விட அம்மா கதாபாத்திரத்தில் வரும் மயிலுக்கு தான் அதிக சம்பளமாம். இரண்டு ஹீரோயின்களின் சம்பளத்தை சேர்த்தாலும் மயிலு நடிகையின் சம்பளத்தை விட அது குறைவாம்.
முன்னணி நடிகைகளுக்கே ரூ.1 கோடி சம்பளம் அளிக்கையில் அம்மா நடிகைக்கு இவ்வளவு சம்பளமா என்று பலரும் வியக்கிறார்கள்.
Post a Comment