விஷாலைத் தொடர்ந்து தாக்கும் நடிகர் சங்க நிர்வாகிகள்

|

நடிகர் விஷாலை அத்தனை சீக்கிரம் விடுவதாக இல்லை நடிகர் சங்க நிர்வாகிகள்.

மீண்டும் அவரைத் தாக்கிப் பேசியதோடு, கண்டனமும் தெரிவித்துள்ளனர்.

நடிகர் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தற்போதைய நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி, துணைத் தலைவர் கே.என்.காளை ஆகியோர் நாடக நடிகர்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

விஷாலைத் தொடர்ந்து தாக்கும் நடிகர் சங்க நிர்வாகிகள்

சமீபத்தில் திருச்சியில் நடந்த நாடக நடிகர்கள் ஆலோசனை கூட்டத்தில் இவர்கள் விஷாலையும், நாசரையும் கடுமையாக விமர்சித்துப் பேச, அது பெரிய புயலைக் கிளப்பியது.

நடிகர் சங்கத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இதற்கு விளக்கம் அளிக்கும்படி இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் விஷால் நடிகர் சங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. விஷால் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டால் சங்கத்தில் இருந்து நீக்கப்படுவார் என்று சங்கத் தலைவர் சரத்குமார் சரத்குமார்.

இந்த நிலையில் மதுரையில் நடந்த சங்கரதாஸ் சாமிகள் குருபூஜை விழாவில் நடிகர் சங்க துணைத் தலைவர் கே.என்.காளை, செயற்குழு உறுப்பினர் பிரகாஷ் ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் நாடக நடிகர் சங்க துணைத் தலைவர் கலைமணி பங்கேற்று பேசும்போது, "சரத்குமார், ராதாரவி போன்றோர் நாடக நடிகர்கள் நலனுக்காக போராடி வருகிறார்கள். அவர்களுக்கு எதிராக விஷால் போன்ற சில நடிகர்கள் செயல்படுகின்றனர். மன்சூர் அலிகான் நாடக நடிகர்களை இழிவுபடுத்தி பேசி வருகிறார்.

நாடக நடிகர்களை தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உட்கார வைத்தவர் ராதாரவி. எனவே சரத்குமார், ராதாரவி கரத்தை வலுப்படுத்த வேண்டும். சங்கத்துக்கு எதிராக செயல்படும் விஷால், மன்சூர் அலிகானை கண்டிக்கிறோம். எங்களுக்கு நடிக்கவும் தெரியும், அடிக்கவும் தெரியும்," என்றனர்.

 

Post a Comment