பல்கேரியாவில் ‘மாஸ்’ ஷூட்டிங்: சூர்யா, ப்ரணீதா ஆட்டம்!

|

சென்னை: வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'மாஸ்' படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. நடிகர் சூர்யாவும், ப்ரணீதாவும் நடிக்கும் பாடல்காட்சிகளும், சில சண்டை காட்சிகளும் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூர்யா, நயன்தாரா, ப்ரணிதா நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'மாஸ்'. இந்த படப்பிடிப்பு சென்னை, ஊட்டி, கேரளா ஆகிய இடங்களில் முடிவடைந்தது. தற்போது மாஸ் படக்குழுவினர் ப்ரணிதா சம்பந்தப்பட்ட ஒருசில காட்சிகளை படமாக்க பல்கேரியா நாட்டிற்கு சென்றுள்ளனர்.

பல்கேரியாவில் ‘மாஸ்’ ஷூட்டிங்: சூர்யா, ப்ரணீதா ஆட்டம்!

அதிகாலையில் படமாக்கப்பட்ட காட்சிகள், சூர்யாவின் படங்களை அவரது ரசிகர்கள் ட்விட்டரில் பதிவேற்றி வருகின்றனர்.

ப்ரேம்ஜி அமரன், சஞ்சய் பாரதி ஆகியோறும் மாஸ் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் மாஸ் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

மலைகளும், கடல்பிரதேசங்களும் கொண்ட பல்கேரியா நாட்டில் மாஸ் படப்பிடிப்பு நடப்பதை போல, அனுஷ்கா, ராணா, பிரபாஸ், தமன்னா நடிக்கும் பிரமாண்ட திரைப்படமான 'பாஹுபலி' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பும் அதே பல்கேரியா நாட்டில் நடைபெறுகிறதாம்.

ஏற்கனவே மாஸ் படத்தில் ராணா, பிரபாஸ் ஆகியோர் சில காட்சிகளில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. எனவே ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க திட்டமிட்டுள்ளார் வெங்கட் பிரபு.

பல்கேரியாவில் முதல்முறையாக ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களின் படப்பிடிப்புகள் நடக்க உள்ளதால் அங்கு வாழும் தமிழர்கள் தங்கள் டுவிட்டர் வலையதளம் மூலம் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர். பல்கேரியா ஒரு மினி கோடம்பாக்கமாக மாறியுள்ளதாகவும் ஒரு பல்கேரிய தமிழர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

 

Post a Comment