ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ஐ' படத்தின் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.
அடுத்து படத்தின் ட்ரைலர் தயாராகி யு சான்றிதழ் பெற்றுள்ளது. இதனை விரைவில் தியேட்டர்களில் வெளியிடவுள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தின் டீசரை, ஹாலிவுட்டில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் தி ஹாப்பிட் (The Hobbit - The Battle of Five Armies) என்ற படத்துடன் இணைத்து வெளியிட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள இப்படம், வட அமெரிக்காவில் மட்டும் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இவற்றில் பெருமாபாலானவற்றில் ஐ பட டீசர் வெளியிடப்பட்டது. ஒரு ஹாலிவுட் படத்தின் இடையில் வெளியாகும் முதல் தமிழ் பட டீசர் என்ற பெருமையை ஐ திரைப்படம் பெற்றுள்ளது.
இதுதவிர, அமீர்கான் நடிப்பில் இந்தியில் உருவாகியுள்ள ‘பி.கே.' படத்தின் இடையிலும் ஐ படத்தின் இந்தி டீசரை வெளியிட ஒப்பந்தம் செய்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 9-ம் தேதி வருகிறது ஐ.
Post a Comment