யாரு, நானா சில்க்?, ராஸ்கல்: கோபத்தில் கொந்தளிக்கும் நடிகை

|

சென்னை: ஆந்திராவில் பிறந்து சென்னையில் செட்டிலான அந்த கண்ணழகி நடிகை தன்னை யாராவது சில்க் ஸ்மிதாவுடன் ஒப்பிட்டால் கடுப்பாகிவிடுகிறாராம்.

ஆந்திராவில் பிறந்து சென்னையில் செட்டிலாகி வேலூரில் கல்லூரி படிப்பை முடித்த அந்த நடிகை கடந்த 2009ம் ஆண்டு கோலிவுட் வந்தார். அதற்கு முன்பு அவர் விளம்பரங்களில் நடித்து வந்தார். இந்தியில் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுத்த டர்ட்டி பிக்சர் படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து அதை தமிழில் ரீமேக் செய்தால் நடிக்க நான் ரெடி என்று நடிகை தெரிவித்திருந்தார்.

யாரு, நானா சில்க்?, ராஸ்கல்: கோபத்தில் கொந்தளிக்கும் நடிகை

மேலும் அவரை பார்ப்பவர்கள் சின்ன சில்க் என்று அழைத்தால் பெருமைப்பட்டு வந்தார். இந்நிலையில் தான் அம்மணிக்கு சில்க்கின் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள் மற்றும் அவரின் வாழ்க்கை முடிந்த விதம் பற்றி தெரிந்து அதிர்ந்துள்ளார்.

இதனால் தற்போது யாராவது தன்னை சில்க் என்று அழைத்தாலோ, அவருடன் ஒப்பிட்டு பேசினாலோ கடுப்பாகிவிடுகிறாராம் நடிகை. சில்க் குத்தாட்டம் போட்டவர். ஆனால் நான் ஹீரோயினாக்கும் என்று பெருமையாக கூறுகிறாராம்.

ரீமேக்கில் நடிக்க ஆசைப்பட்டபோது சில்க் வாழ்க்கை வரலாறு நடிகைக்கு தெரியாமல் போய்விட்டதோ?

 

Post a Comment