தெலுங்கு இசையமைப்பாளர் சக்ரி மரணம்

|

ஹைதராபாத்: பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் சக்ரி இன்று திடீர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 40.

1974-ம் ஆண்டு பிறந்த சக்ரியின் இயற்பெயர் சக்ரதார் கில்லா. வராங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மெஹ்பூப் நகரில் பிறந்தார்.

பூரி ஜெகன்னாத் இயக்கிய பச்சி படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு 85 படங்களில் இசையமைப்பாளராகவும் பாடகராகவும் புகழ்பெற்றார். பல புதிய பாடகர் பாடகிகளை அறிமுகப்படுத்தினார்.

தெலுங்கு இசையமைப்பாளர் சக்ரி மரணம்

சிறந்த இசையமைப்பாளருக்கான பல விருதுகளை வென்ற சக்ரி, சத்யம் படத்துக்காக சிறந்த பாடகர் விருதை வென்றார்.

இடியட், சிம்ஹா, அம்மா நன்னா ஓ தமில அம்மாயி, தேவதாசு, தேசமுத்துரு, கிருஷ்ணா, மஸ்கா போன்றவை அவரது இசையமைப்பில் வெளியாகி வெற்றி பெற்றவைகளுள் குறிப்பிடத்தக்கது.

எர்ர பஸ், யர்ரா, ரே போன்றவை இந்த ஆண்டு வெளிவந்த அவரது சில படங்கள்.

சக்ரியின் திடீர் மரணம் தெலுங்குப் பட உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

Post a Comment