சென்னை: நயன்தாரா ஒரு லேடி சூப்பர் ஸ்டார் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்த நயன்தாராவுக்கு வாய்ப்புகள் வந்து குவிகின்றன. 2013ம் ஆண்டில் ராஜா ராணி, ஆரம்பம் என்று இரண்டு வெற்றிப் படங்களில் நடித்துவிட்டார்.
தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் நண்பேன்டா, சிம்புவுடன் இது நம்ம ஆளு, சூர்யாவுடன் மாஸ், ஜெயம் ரவியுடன் தனி ஒருவன், விஜய் சேதுபதியுடன் நானும் ரவுடிதான் என பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் நயன்தாரா.
இந்நிலையில் நயன்தாரா பற்றி உதயநிதி ஸ்டாலின் கூறுகையில்,
நயன்தாரா ஒரு லேடி சூப்பர் ஸ்டார். அவருடன் நடிக்க நான் கொடுத்து வைத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு இருக்கும் போட்டி போதாது என்று லேடி சூப்பர் ஸ்டார் வேறா?
Post a Comment