வயசானாலும் அழகும், ஸ்டைலும் கொஞ்சமும் குறையாத ஐஸ்வர்யா ராய்

|

மும்பை: மும்பையில் நடந்த நிகழ்ச்சிக்கு வந்த ஐஸ்வர்யா ராயை பார்த்தவர்களின் கண்கள் மூட மறுத்தன.

ஐஸ்வர்யா ராய்க்கு திருமணமாகி ஒரு குழந்தையும் பிறந்துவிட்டது. ஆனால் இன்னமும் நம்ம ஊர் மன்மத ராசாக்கள் திருமணத்திற்கு பெண் பார்க்கச் செல்கையில் ஐஸ்வர்யா ராய் மாதிரி பெண் வேண்டும் என்கிறார்கள். அப்படி பல தலைமுறையினரை தனது அழகால் கட்டி வைத்திருப்பவர் ஐஸ்வர்யா ராய்.

வயசானாலும் அழகும், ஸ்டைலும் கொஞ்சமும் குறையாத ஐஸ்வர்யா ராய்

குழந்தை பிறந்த பிறகு கொஞ்சம் குண்டான ஐஸ் தற்போது உடல் எடையை குறைத்து சிக்கென்று ஆகிவிட்டார். லாங்கின்ஸ் வாட்ச்சின் பிராண்ட் அம்பாசிடர் ஐஸ். அவர் மும்பையில் நடந்த லாங்கின்ஸ் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார்.

வயசானாலும் அழகும், ஸ்டைலும் கொஞ்சமும் குறையாத ஐஸ்வர்யா ராய்

குழந்தை ஆராத்யா பிறந்ததில் இருந்து முழுக்கை வைத்த அனார்கலி அணிந்து வரும் ஐஸ் இந்த நிகழ்ச்சிக்கு முழங்கால் வரையிலான கருப்பு நிற குச்சி(Gucci) டிசைனர் கவுன் அணிந்து முழங்கால் வரையிலான கருப்பு பூட் அணிந்து வந்தார். மேலும் முடிக்கும் கருப்பு நிற டை அடித்து அம்சமாக இருந்தார்.

வயசானாலும் அழகும், ஸ்டைலும் கொஞ்சமும் குறையாத ஐஸ்வர்யா ராய்

இந்த உடையில் ஐஸ்வர்யா மிகவும் அழகாக இருந்தார். கவுனுக்கு ஏற்றது போல் காதில் சின்னதாக கம்மல், இரண்டு கைகளிலும் மோதிர விரல்களில் மட்டும் மோதிரம், இடது கையில் வாட்ச் என்று சிம்பிளாக வந்தாலும் சூப்பராக வந்திருந்தார்.

 

Post a Comment