தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் சோதனை முயற்சியாக தற்போது 60 நிமிடங்கள் திரைப்படம் ஒன்றை எடுத்து வருகிறார். 'விசாரணை' என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ் நாயகனாக நடித்து வருகிறார்.
பாடல்கள் இன்றி உருவாகி வரும் 'விசாரணை' திரைப்படம் ஒரு தமிழ்த்திரையுலகில் ஒரு சோதனை முயற்சி என்றும், இந்த படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை அடுத்து, அடுத்தடுத்து இதுபோன்ற ஒரு மணி நேர திரைப்படம் உருவாக்க இருப்பதாக வெற்றிமாறன் கூறியுள்ளார். விசாரணை படத்தின் படப்பிடிப்பு மூன்று நாட்களில் முடிவடைய உள்ளதாக கூறப்படுகிறது.
வெற்றிமாறனின் விசாரணை
‘பொல்லாதவன்', ‘ஆடுகளம்' ஆகிய படங்களை இயக்கிய வெற்றிமாறன் தற்போது ‘அட்டக்கத்தி' தினேஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு ‘விசாரணை' என்று பெயர் வைத்துள்ளனர்.
கயல் ஆனந்தி
விசாரணையில் தினேஷிற்கு ஜோடியாக ஆனந்தி நடித்து வருகிறார். மேலும் சமுத்திரகனி, ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
ஆடுகளத்திற்கு பின்னர்
வெற்றிமாறன் இயக்கிய ‘ஆடுகளம்' படத்திற்கு சிறந்த படத்திற்கான தேசிய விருது கிடைத்தது. இப்படத்தை தொடர்ந்து தமிழில் எந்த படமும் அவர் இயக்கவில்லை. மாறாக, இவரது உதவியாளர்கள் இயக்கும் படங்களை தயாரிப்பது மற்றும் திரைக்கதை எழுதுவது, வசனங்கள் எழுதுவது ஆகிய பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
இறுதிக்கட்டத்தில் விசாரணை
தற்போது விசாரணை மூலம் மீண்டும் இயக்குனர் பணியை தொடர்கிறார். விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 3 நாட்களில் படப்பிடிப்பை முடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
முதல் போஸ்டர்
இன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இது சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சூதாடி
நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ் - வெற்றிமாறன் இணைப்பில் தொடங்கப்பட்ட படம் 'சூதாடி'. முதலில் பெயரிடப்படாமல் தொடங்கப்பட்ட படத்தில் தனுஷூடன் பார்த்திபனும் நடித்து வந்தார். பிறகு, இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
கைவிடப்பட்டதா சூதாடி
'அனேகன்', 'ஷமிதாப்', 'வேலையில்லா பட்டதாரி' ஆகிய படங்களில் மும்முரமாக பணியாற்ற ஆரம்பித்தார் தனுஷ். இதனால், வெற்றிமாறன் படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதனை வெற்றி மாறன் மறுத்தார்.
விசாரணைக்குப் பின்னர்
'அட்டகத்தி' தினேஷை வைத்து தனுஷ் தயாரிப்பில் 'விசாரணை' என்னும் படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். 'சூதாடி'க்கு முன்னரே இப்படத்தை முடித்து வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். இதற்குப் பின்னர் சூதாடியை எடுக்கப்போகிறார் வெற்றிமாறன்.
ஹாலிவுட் படம் போல
விசாரணை திரைப்படம் 2 மணி நேர படம் இல்லை. ஹாலிவுட் படங்களை விடவும் குறைவான நேரம் கொண்டதாக, ஏறக்குறைய 1 மணி நேரத்திற்கு ஓடும் படமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச்சில் ரிலீஸ்
மிகக் குறுகிய நேரம் கொண்டதாக வெளிவரும் முதல் சினிமாவாக 'விசாரணை' இருக்கும் என்கிறார்கள் வெற்றிமாறன் வட்டாரத்தில். இப்படக்குழுவினர் தற்போது கிளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் படத்தை படம் ரீலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment