சல்மான் கான் பிறந்தநாளுக்கு சர்பிரைஸ் பரிசு கொடுக்கப் போகும் ஜெய் ஹோ நடிகை

|

மும்பை: சல்மான் கானின் பிறந்தநாள் பரிசாக அவரது தொண்டு நிறுவனமான பீயிங் ஹ்யூமனுக்கு நிதி அளிக்கப் போவதாக நடிகை டெய்சி ஷா தெரிவித்துள்ளார்.

சல்மான் கானின் ஜெய் ஹோ படம் மூலம் பாலிவுட்டில் ஹீரோயின் ஆனவர் டெய்சி ஷா. அவர் சல்மான் கானின் 48வது பிறந்தநாள் அன்று அவருக்கு சர்பிரைஸாக பரிசளிக்க திட்டமிட்டுள்ளார். சல்மான் வரும் 27ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சல்மான் பிறந்தநாளுக்கு சர்பிரைஸ் பரிசு கொடுக்கப் போகும் ஜெய் ஹோ நடிகை

இது குறித்து டெய்சி கூறுகையில்,

நான் சல்மான் கானுக்கு பரிசாக என்ன தருவது. அவரிடமே எல்லாம் உள்ளது. அதனால் அவரது தொண்டு நிறுவனத்திற்கு நிதி அளிக்க உள்ளேன். கடந்த 2 ஆண்டுகளாக நான் அந்த தொண்டு நிறுவனத்திற்கு நிதி அளித்து வருகிறேன் என்றார்.

சல்மான் கான் புதுமுகங்களை தனது படங்களில் ஹீரோயினாக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment