விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கப்போவதாக கோலிவுட் வட்டாரங்கரங்கள் தெரிவிக்கின்றன.
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘ஐ' படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனையடுத்து கோலிசோடா பட இயக்குநர் விஜய் மில்டனின் இயக்கத்தில் ‘பத்து எண்றதுக்குள்ள' படத்தில் நடித்து வருகிறார்.
இன்னுமொரு பிரம்மாண்டம்
இந்த நிலையில் விஷ்ணுவர்த்தனுடன் விக்ரம் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பிரம்மாண்ட படமாக அமையும் என்று பேச்சு அடிபடுகிறது.
இந்தி ரீமேக்
அக்ஷய் குமார் நடித்துள்ள இந்திப்படத்தின் ரீமேக் ஆகவும் இந்தப்படம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆர்யா உடன் விஷ்ணுவர்த்தன்
அதேசமயம் விஷ்ணுவர்த்தன் இப்போது ஆர்யா, கிருஷ்ணா, தீபா சன்னிதி நடிக்கும் யட்சன் படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படம் தற்போது முடியும் தருவாயில் உள்ளது.
அஜீத்துக்கு கதை
இதனையடுத்து அஜீத்திற்கு கதை கூறியுள்ளார் விஷ்ணுவர்த்தன். இவர் ஏற்கனவே அஜீத்தில் பில்லா,ஆரம்பம் படங்களை இயக்கியவர்.
விக்ரமுடன் அடுத்து
இந்த நிலையில் விக்ரமுடன் இணையப்போவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம் விரைவில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.
ஆண்டுக்கு 2 படம்
விக்ரம் நடித்த ஐ படம் மூன்றாண்டுகளுக்கு மேலாக தயாராகி வருகிறது. இனிமேல் ஆண்டுக்கு இரண்டு படம் ரீலீசாகும் வகையில் படங்களில் நடிக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளாராம் விக்ரம்.
Post a Comment