ரஜினி நடித்த லிங்கா படத்தின் திருட்டு விசிடியை வெளியிடுவோருக்கு கண்டனம் தெரிவித்துள்ள ரஜினிகாந்த் தலைமை ரசிகர் மன்றம், இந்த செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் மன்ற தலைவர் என்.ராம்தாஸ், செயலாளர் ஆர்.சூர்யா, பொருளாளர் கே.ரவி ஆகியோர் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:
எங்கள் தலைவர் ரஜினிகாந்த் நடித்த லிங்கா படம் உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடுகிறது. இந்த படத்தின் திருட்டு சி.டி.க்கள் தமிழகம் மற்றும் புதுவையில் பல பகுதிகளில் விற்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.
திருட்டு சி.டி. விற்போரை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த இழிய செயலில் ஈடுபடுவோரை ரசிகர்கள் போலீசில் பிடித்து கொடுக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
போலீசார் இந்த ஆசாமிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்,"
-இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
Post a Comment