ரசிகர்களுக்கு மட்டுமல்ல, திரையுலகினருக்கே கூட ரஜினியைச் சந்திப்பதென்பது ஒரு அதிகபட்ச ஆசை.. அல்லது கனவு என்றாலும் மிகையல்ல.
திரையுலகில் நுழைந்து ஒரு அடையாளம் பெற்றதும், ரஜினியைச் சந்தித்து ஆசி பெற வேண்டும் என்பது பலரது ஆசை.
இப்போதைய நடிகர்களில் சிம்பு, சிவகார்த்திகேயன், சந்தானம், சிவா போன்றவர்கள் ரஜினி படத்தின் முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் அளவுக்கு ரஜினியின் தீவிர ரசிகர்கள். அவரது ஒவ்வொரு பிறந்த நாளிலும் போயஸ் தோட்டத்தில் தவறாமல் ஆஜராகிவிடுவார்கள்.
நடிகைகளும் அப்படித்தான். சமீப காலமாக நகைச்சுவைப் பாத்திரங்களில் மின்ன ஆரம்பித்திருப்பவர் நடிகை வித்யுலேகா. நீதானே என் பொன் வசந்தம், வீரம் போன்ற படங்களில் சந்தானத்தின் ஜோடியாக வருவாரே.. அவர்தான் இந்த வித்யுலேகா. நடிகர் மோகன் ராமின் மகள்.
சமீபத்தில் ரஜினியை அவரது வீட்டில் சந்தித்து, காலில் விழுந்து ஆசி பெற்றார் வித்யு லேகா. அவருக்கு ராகவேந்திரர் படத்தை பரிசாகத் தந்து வாழ்த்தியுள்ளார் ரஜினிகாந்த்.
வித்யுலேகாவுடன் அவர் தந்தை மோகன் ராமும் சென்று ரஜினியைச் சந்தித்தார்.
Post a Comment