பெங்களூரில் நாளை சர்வதேச திரைப்பட விழா தொடக்கம்!

|

பெங்களூருவில் வியாழக்கிழமை (டிச.4) சர்வதேச திரைப்பட விழா தொடங்குகிறது.

இதுகுறித்து கர்நாடக திரைப்பட அகாதெமியின் தலைவர் ராஜேந்திரசிங் பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பெங்களூரு அம்பேத்கர் பவனில் வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் தொடங்கும் சர்வதேச திரைபட விழாவுக்கு மாநில அமைச்சர் ரோஷன் பெய்க் தலைமை வகிக்கிறார். முதல்வர் சித்தராமையா தொடங்கி வைக்கிறார்.

பெங்களூரில் நாளை சர்வதேச திரைப்பட விழா தொடக்கம்!

இந்த விழாவில் கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளைச் சேர்ந்த 170 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. முதல் படமாக ஹங்கேரி மொழியின் தி அம்பாசிடர் டு டர்ன் திரைப்படம் திரையிடப்படும்.

மாநகரில் சுதந்திரப் பூங்கா, சாமுண்டீஸ்வரி ஸ்டுடியோ, லிடோ, பாதாமி ஹவுஸ், செய்தித் துறை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் படங்கள் திரையிடப்படும். திரைப்பட விழாவில் மறைந்த இயக்குநர் ஹுனுசூர் கிருஷ்ணமூர்த்தி, ஹொன்னப்பா பாகவதர், ஞானபீட விருது பெற்ற யு.ஆர்.அனந்தமூர்த்தி உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்தப்படும்.

இந்த விழாவில் இந்தி திரைப்பட மூத்த இயக்குநர் சுபாஷ் கய், அமைச்சர்கள் ராமலிங்க ரெட்டி, அம்பரீஷ், உமாஸ்ரீ உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

கன்னட திரைப்பட பிரிவில் பிருக்குருதி, அகசி, பார்லர், ஹரிவு, உலித்வரு கண்டந்தே, கஜகேசரி படங்கள் திரையிடப்படுகின்றன என்றார்.

 

Post a Comment