தாடியும் மீசையுமாகவே நாம் பார்த்துப் பழக்கப்பட்ட விஜய் சேதுபதியை, இனி கொஞ்ச நாளைக்கு தாடி மீசை இல்லாமல் பார்க்கலாம்.
தனுஷ் தயாரிப்பில் அவர் நடிக்கும் நானும் ரவுடிதான் படத்துக்காக இந்த இரண்டையுமே அவர் தியாகம் செய்துவிட்டார்.
இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பவர் நயன்தாரா. இவர்கள் இணையும் இந்த படத்தை போடா போடி படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி வேகமாக நடந்து வருகிறது.
இந்தப் படத்துக்காக விஜய் சேதுபதி தன்னுடைய தாடி மற்றும் மீசையை மழித்துக் கொண்டுள்ளார். இதே படத்தில் நரைத்த தாடி. பெரிய மீசையுடனும் அவர் வருகிறார். அந்தக் காட்சிகள் ஏற்கெனவே எடுக்கப்பட்டுவிட்டன.
இப்போது இளமையான கேரக்டருக்கு ஏற்றமாதிரி அவர் மாறியுள்ளார்.
இதுவரை அவர் நடித்த எல்லாப் படங்களிலுமே லேசான அல்லது அடர் தாடி மற்றும் மீசையுடன்தான் தோன்றினார் விஜய் சேதுபதி. அதுவே அவரது அடையாளமாகவும் மாறிவிட்டது.
Post a Comment