ரஜினி நடித்த லிங்கா திரைப்படம் அமெரிக்காவில் பெரும் வசூலைக் குவித்து வருகிறது. ஞாயிற்றுக் கிழமை நிலவரப்படி இந்தப் படம் சுமார் ரூ 10 கோடியை வசூலித்து இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
முதலிடத்தில் ரஜினியின் எந்திரன்தான் இன்னமும் உள்ளது. ஆனால் அந்த இடத்தை இன்னும் ஓரிரு நாட்களில் லிங்கா பிடித்துவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் 118 அரங்குகளில் நடந்த பிரிமியர் ஷோக்கள் மூலம் மட்டுமே 404,566 டாலர்களைக் குவித்து, ஹாலிவுட் படமான ஹன்டர் கேமை பின்னுக்குத் தள்ளியது. பின்னர் வெள்ளியன்று நடந்த வழக்கமான ஷோக்கள் மற்றும் சனிக்கிழமை காட்சிகளில் மேலும் 8.5 லட்சம் டாலர்களைக் குவித்தது. ஞாயிற்றுக் கிழமை மட்டுமே 1.52 டாலர்கள் வசூலானது. ஆக மூன்று நாட்களில் 1.37 மில்லியன் டாலர்களைக் குவித்த லிங்கா, எந்திரனுக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளது அமெரிக்காவில்.
நாளை எந்திரனை மிஞ்சி முதலிடம் பிடிக்க வாய்ப்பிருப்பதாக படத்தை வெளியிட்டுள்ள அட்மஸ் என்டர்டெயின்மெண்ட் தெரிவித்துள்ளது.
அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் இந்த 2014 ம் ஆண்டு வெளியான தமிழ்ப் படங்களில் வசூலில் முதலிடத்தில் லிங்காவும், அடுத்த இடத்தில் கோச்சடையானும்தான் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment