நான் மோடியின் மிகப் பெரிய ரசிகை, அவரைப் பற்றி பேசிக்கிட்டே இருப்பேன்: ஷில்பா ஷெட்டி

|

லக்னோ: தான் பிரதமர் நரேந்திர மோடியின் மிகப் பெரிய ரசிகை என்று பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் பி.சி. ஜுவல்லர் நகைக்கடையை திறந்து வைக்க பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியை அழைத்திருந்தார்கள். ஷில்பா வரும் செய்தி அறிந்து ஏராளமான ரசிகர்கள் கடை முன்பு குவிந்துவிட்டனர். அத்தனை கூட்டத்திற்கு மத்தியில் வந்து நின்ற காரில் இருந்து இறங்கி வந்து ஷில்பா நகைக்கடையை திறந்து வைத்தார்.

தன்னைப் பார்க்க இத்தனை ரசிகர்கள் கூடியதை பார்த்து ஷில்பா நெகிழ்ந்துவிட்டார். நகைக்கடையை திறந்து வைத்த ஷில்பாவிடம் செய்தியாளர்கள் பிரதமர் மோடி பற்றி கருத்து தெரிவிக்குமாறு கேட்டனர்.

நான் மோடியின் மிகப் பெரிய ரசிகை, அவரைப் பற்றி பேசிக்கிட்டே இருப்பேன்: ஷில்பா ஷெட்டி

அதற்கு அவர் கூறுகையில்,

நான் பிரதமர் மோடிஜியின் மிகப் பெரிய ரசிகை. அவரைப் பற்றி பேசினால் அவர் அந்த நல்லதை செய்தார், இதை செய்தார் என்று பேசிக் கொண்டே இருப்பேன் என்றார்.

மோடியின் சுத்தமான இந்தியா சவாலை பாலிவுட்காரர்கள் பலரும் ஏற்றுள்ளனர். அவர்களை பாராட்டி மோடியும் ட்வீட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment