சென்னையில் சினிமா பார்க்கும் அனுபவத்தை இனிமையாக்கிய அரங்குகளில் முக்கியமானது சத்யம் சினிமா அரங்கம். தமிழகத்தின் முதல் நவீன மல்டிப்ளெக்ஸ் என்றால் அது இந்த காம்ப்ளெக்ஸ்தான்.
இன்றைக்கு சென்னையில் பல நவீன அரங்குகள் இருந்தாலும், படம் பார்க்க நட்சத்திரங்களின் முதல் தேர்வு சத்யமாகத்தான் இருக்கும்.
இன்று சத்யம் குழுமத்தில் 50க்கும் மேற்பட்ட நவீன அரங்குகள் உள்ளன. தமிழகத்தில் சென்னையில் சத்யம், எஸ்கேப், லக்ஸ், எஸ்2 பெரம்பூர், எஸ் 2 தியாகராஜா போன்ற அரங்குகள் உள்ளன. விரைவில் வடபழனியில் ஒரு மல்டிப்ளெக்ஸை ஆரம்பிக்க உள்ளது. கோவையில் தி சினிமா என்ற மாலும் சத்யம் குழுமத்தில் உள்ளது.
இந்த சத்யம் அரங்கங்களை மற்றொரு மெகா தியேட்டர் குழுமமான பிவிஆர் வாங்கப் போவதாக செய்திகள் உலா வருகின்றன. பிவிஆர் தரப்பில், இது குறித்து பேச்சு நடந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
ரூ 1000 கோடி வரை இதற்காக விலை பேசப்படுவதாகக் கூறப்படுகிறது.
Post a Comment