தேர்தல் வாக்குறுதியில் சொன்ன ரூ 100 கோடியை இளையராஜாவுக்கு வசூலித்து தருமா தயாரிப்பாளர் சங்கம்?

|

'எங்கள் அணி வெற்றி பெற்றால், இளையராஜாவுக்கு எக்கோ நிறுவனம் தரவேண்டிய காப்புரிமைத் தொகையான ரூ 100 கோடியை வசூலித்துத் தருவோம்' - கலைப்புலி தாணு தலைமையிலான அணி தயாாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியில் மிக முக்கியமானது இது.

காரணம், வசூலிக்கப்படும் ரூ 100 கோடியில் பாதி இளையராஜாவுக்கு, மீதி தயாரிப்பாளர் சங்கத்துக்கு.

தேர்தல் வாக்குறுதியில் சொன்ன ரூ 100 கோடியை இளையராஜாவுக்கு வசூலித்து தருமா தயாரிப்பாளர் சங்கம்?

இப்படி மட்டும் நடந்தால், இருப்பதிலேயே பணக்கார சினிமா சங்கமாகிவிடும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்.

இளையராஜாவுக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் ராயல்டி எனும் காப்புரிமைத் தொகையைக் கொடுக்காமலேயே அவரது ஆயிரக்கணக்கான பாடல்களை விற்று காசு பார்த்து வருகிறார்கள் எக்கோ, அகி மியூசிக் உள்ள இசை வெளியீட்டு நிறுவனங்கள்.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. அவர் பாடல்கள், இசையை இனி எந்த நிறுவனமும் விற்கக் கூடாது என தடை உத்தரவு பெற்றுள்ளார் இளையராஜா. இனி அனைத்துப் பாடல்களையும் இளைராஜாவே தன் சொந்த பேனரில் வெளியிடவிருக்கிறார்.

இளையராஜாவுக்கு தராமல் ஏமாற்றப்பட்ட காப்புரிமைத் தொகை ரூ 100 கோடி என கணக்கிட்டுள்ளது தயாரிப்பாளர் சங்கம். இதற்காக அனைத்துத் தயாரிப்பாளர்களும் கையெழுத்திட்டு, இளையராஜா இதுவரை இசையமைத்த அனைத்துப் படங்களின் இசை உரிமையையும் அவருக்கே வழங்கியுள்ளனர்.

எனவே இளையராஜாவுக்கு மட்டுமே சொந்தமான இசையை, இதுவரை விற்று ஈட்டப்பட்ட பல நூறுகோடி ரூபாய் பணத்தில் ஒரு பகுதியை ராஜாவுக்கு வழங்கக் கோரி வழக்கும் தொடரவிருக்கிறது தயாரிப்பாளர் சங்கம்.

 

Post a Comment