விஜய் நடித்த கத்தி படம் இன்று நூறு நாட்களைத் தொட்டுள்ளது.
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் - சமந்தா நடித்த படம் கத்தி. லைகா நிறுவனம் தயாரித்த இந்தப் படம் பல வழக்குகள், ஆர்ப்பாட்டங்கள், சர்ச்சைகளைக் கடந்து தீபாவளிக்கு வெளியானது.
உலகெங்கும் வெளியான இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், வசூலில் இதுவரை வந்த விஜய் படங்களை முந்தி சாதனைப் படைத்ததாக பாக்ஸ் ஆபீஸில் கூறப்படுகிறது.
இந்தப் படம் சென்னையில் மூன்று திரையரங்குகளில் நூறு நாளை எட்டியுள்ளது.
வெளிநாட்டு கார்ப்பொரேட் நிறுவனங்கள், தமிழகத்தில் விவசாயத்துக்கான தண்ணீரை உறிஞ்சுவதை மையப்படுத்தி வந்த படம் கத்தி. இந்தக் கதை தன்னுடையது என சிலர் வழக்குத் தொடர்ந்தனர். படத்தைத் தயாரித்த லைகா நிறுவனத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இதையடுத்து லைகா பெயரை நீக்கிவிட்டு படத்தை வெளியிட்டனர்.
கடைசியில் நீதிமன்றம் அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தது. இப்போது லைகா நிறுவனப் பெயரிலேயே படம் நூறாவது நாள் கண்டுள்ளது.
Post a Comment