பாலாவின் இயக்கத்தில் உருவாகி வரும் தாரை தப்பட்டை படம் பற்றி பிரஸ் மீட் வைக்காமலே ஏகப்பட்ட செய்திகள் கொட்டுகின்றன.
காரணம், இந்தப் படம் பாலாவின் ஸ்பெஷல் உருவாக்கம் மற்றும் இளையராஜாவின் ஆயிரமாவது படம் என்ற பெருமை.
படத்துக்கான இசையை இளையராஜா பல மாதங்களுக்கு முன்பே போட்டுக் கொடுத்துவிட்டார். ஆனால் திரைக்கதையை மீண்டும் மீண்டும் சரிபண்ணிக் கொண்டிருந்த பாலா, இரு மாதங்களுக்கு முன்புதான் கும்பகோணத்தில் படப்பிடிப்பை ஆரம்பித்தார். அதே வேகத்தில் பெருமளவு காட்சிகளை படமாக்கியும் விட்டார்.
படத்தின் நாயகன் சசிகுமாருக்கு இதில் ஏழு விதமான தோற்றங்களாம். எந்தத் தோற்றமும் வெளியில் தெரியக்கூடாது என்பதில் கவனமாக இருப்பதால் சமீப காலமாக சசியை எங்குமே பார்க்க முடிவதில்லை.
சசிகுமார் ஜோடியாக இந்தப் படத்தில் வரலட்சுமி நடிக்கிறார். விரைவில் மிக பிரமாண்டமாக இசை வெளியீட்டு விழா நடத்தவிருக்கிறார்கள்.
Post a Comment