தமிழில் சமீபத்தில் வெளியான, முற்றிலும் புதுமுகங்கள் நடித்த திகில் படமான ர விரைவில் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.
கடந்த டிசம்பரில் வெளியான இந்தப் படம் இன்னும் சில அரங்குகளில் ஓடிக் கொண்டுள்ளது.
பிரபு யுவராஜ் என்ற புதியவர் இந்தப் படத்தை தமிழில் இயக்கியிருந்தார். அஷ்ரப், அதிதி செங்கப்பா நடித்திருந்தனர்.
இப்போது இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் முயற்சி நடக்கிறது. இந்தியில் இந்தப் படத்தை பிரபு யுவராஜும் அஷ்ரப்பும் இணைந்து இயக்குகின்றனர். வைல்ட் எலிபென்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை இந்தியில் தயாரிக்கிறது.
தமாசே என்ற இந்திப் படத்தை தயாரித்த நிறுவனம் இது.
இந்தியில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என இயக்குநர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment