பாலாவின் சண்டி வீரனை வாங்கியது ஸ்டுடியோ கிரீன்!

|

இயக்குனர் பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரித்த "சண்டி வீரன்" படத்தின் வெளியீட்டு உரிமையை வெற்றிகரமாக கைபற்றிய ஸ்ரீ கீரீன் புரோடக்ஷன்ஸ் நிறுவனம்

பாலா இயக்கத்தில் பரதேசி, மற்றும் மிஷ்கின் இயக்கிய பிசாசு போன்ற படங்களைத் தயாரித்தது பி ஸ்டுடியோஸ். பாலாவின் சொந்தப் பட நிறுவனம் இது.

பாலாவின் சண்டி வீரனை வாங்கியது ஸ்டுடியோ கிரீன்!

தற்போது சற்குணம் இயக்கத்தில், அதர்வா மற்றும் ஆனந்தி நடிக்கும் சண்டி வீரன் என்னும் படத்தைத் தயாரித்துள்ளது.

சண்டி வீரன் படத்தை தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய இடங்களில் வெளியிடும் உரிமையை எம்எஸ் சரவணனின் ஸ்ரீ கீரீன் புரொடக்ஷன்ஸ் பெற்றுள்ளது.

ஸ்ரீ கீரீன் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் சலீம், வேலையில்லா பட்டதாரி, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற வெற்றிப் படங்களை இதற்கு முன் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் சலிம் திரைப்படத்தையும், சிட்டி ஏரியாவில் வேலையில்லா பட்டதாரி மற்றும் கயல் படத்தையும், செங்கல்பட்டு ஏரியாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், பிட்சா 2, வெள்ளைக்கார துரை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா ஆகிய படங்களையும் வெளியிட்டுள்ளனர்.

இப்போது சண்டி வீரனை தமிழகம், கேரளா, கர்நாடகாவில் வெளியிடவிருக்கின்றனர். நய்யாண்டி படத்துக்குப் பிறகு சற்குணம் இயக்கும் படம் இது.

 

Post a Comment