அடுத்த மாதம் தொடங்குகிறது அஜீத் - சிவா கூட்டணியின் புதிய படம்!

|

வீரம் படத்தை இயக்கிய சிவாவுக்கே தனது அடுத்த பட வாய்ப்பையும் அஜீத் வழங்கியிருப்பது தெரிந்த விஷயம்.

இந்தப் படத்தை அடுத்த மாதமே தொடங்கிவிடலாம் என அஜீத் கூறிவிட்டாராம்.

ஆரம்பம், என்னை அறிந்தால் படங்களைத் தொடர்ந்து இந்த புதிய படத்தையும் ஏ எம் ரத்னமே தயாரிக்கிறார்.

அடுத்த மாதம் தொடங்குகிறது அஜீத் - சிவா கூட்டணியின் புதிய படம்!

‘வீரம்' படத்தை கிராமத்துப் பின்னணியில் கொடுத்த சிவா, இந்தப் புதிய படத்தை நகரத்து சூழலை மையமாக வைத்து எடுக்கப் போகிறாராம்.

இயக்குனர் சிவா இயக்கிய ‘சிறுத்தை', ‘வீரம்' இரண்டிலுமே தமன்னாதான் நாயகியாக நடித்தார். ஆனால் இந்தப் படத்தில் அந்த சென்டிமென்டெல்லாம் கிடையாதாம்.

சமந்தாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.

 

Post a Comment