மும்பை: பாலிவுட் நடிகை சோஹா அலி கான் தனது காதலரான நடிகர் குணால் கேமுவை பதிவுத் திருமணம் செய்து கொண்டார்.
பாலிவுட் நடிகர் சயிப் அலி கானின் தங்கை நடிகை சோஹா அலி கான். அவர் பாலிவுட் நடிகர் குணால் கேமுவை காதலித்து வந்தார். இந்நிலையில் கேமு சோஹாவுக்கு மோதிரம் அணிவித்து திருமணத்தை நிச்சயம் செய்தார்.
இதையடுத்து சிறப்பு திருமண சட்டப்படி கடந்த 25ம் தேதி அவர்களின் திருமணம் நடைபெற்றது. மும்பையில் உள்ள சோஹாவின் வீட்டில் அவரது தாய் பாலிவுட் நடிகை சர்மிளா தாகூர், சகோதரர் சயிப் அலி கான், அண்ணி கரீனா கபூர், சகோதரி சபா அலி கான் ஆகியோரின் முன்பு பதிவுத் திருமணம் நடந்தது. திருமணம் மிகவும் எளிமையாக நடந்தது.
அதன் பிறகு பிரமாண்டமாக திருமண வரவேற்பு நடைபெற்றது. வரவேற்பு நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், நடிகைகள் நேஹா தூபியா, மலாய்க்கா அரோரா கான், அம்ரிதா அரோரா, சோபி சவுத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருமண வரவேற்பில் சயிப் அலி கானின் மகன் சித்தி கரீனா கபூருடன் சகஜமாக பழகியதுடன், ஒன்றாக நின்று போட்டோ எடுத்துக் கொண்டார்.
Post a Comment