இசைக் குடும்பத்தில் இன்னுமொரு திருமணம்!

|

இளையராஜாவின் அண்ணன் ஆர்டி பாஸ்கர் மகள் வாசுகிக்கு விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது.

தமிழ் சினிமாவில் இன்று முக்கியமான காஸ்ட்யூம் டிசைனராகத் திகழ்கிறார் வாசுகி பாஸ்கர்.

பாரதிராஜாவின் கண்களால் கைது செய் படத்தில் காஸ்ட்யூம் டிசைனிங்கை ஆரம்பித்தவர், தொடர்ந்து சென்னை 28, கோவா, ஆரண்யகாண்டம், அவன் இவன், மங்காத்தா எனப் பல வெற்றிப் படங்களில் பணியாற்றியுள்ளார்.

இசைக் குடும்பத்தில் இன்னுமொரு திருமணம்!

பல முன்னணி நட்சத்திரங்களின் பர்சனல் காஸ்ட்யூம் டிசைனரும் இவர்தான்.

இந்நிலையில் வாசுகி பாஸ்கருக்கு விரைவிலேயே திருமணம் செய்து வைக்க வீட்டில் முடிவு செய்திருக்கிறார்களாம். இதற்காக ஏற்கெனவே மாப்பிள்ளை தேடும் படலத்தை ஆரம்பித்துவிட்டார்களாம். பார்த்தி பாஸ்கர், கார்த்திக்ராஜா, யுவன்சங்கர் ராஜா, வெங்கட்பிரபு, பிரேம்ஜி என நான்கு அண்ணன்களும் பொருத்தமான பையனைத் தேடி வருகிறார்களாம்.

அடுத்த வாரமே வாசுகியின் திருமணம் குறித்து அறிவிப்பு வரும் என்கிறார்கள்.

 

Post a Comment