'புலி' படக்குழுவினருக்கு பொங்கல் பரிசாக தங்க காசு, திருப்பதி லட்டு கொடுத்த விஜய்

|

சென்னை: பொங்கல் பண்டிகை அன்று விஜய் தனது புலி படக்குழுவினருக்கு தங்க காசு மற்றும் திருப்பதி லட்டு ஆகியவற்றை கொடுத்து அசத்தியுள்ளார்.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வரும் படம் புலி. இதில் ஹன்சிகா, ஸ்ருதி ஹாஸன், ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். சென்னையில் அமைக்கப்பட்ட பிரமாண்ட செட்டில் சில பாடல் காட்சிகள் மற்றும் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டது.

'புலி' படக்குழுவுக்கு தங்க காசு, திருப்பதி லட்டு கொடுத்த விஜய்

இதையடுத்து புலி படக்குழுவினர் தற்போது தலக்கோணத்தில் தங்கி பணியாற்றி வருகின்றனர். படக்குழு பொங்கலுக்கு கூட விடுப்பு எடுக்காமல் வேலை செய்துள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை விஜய் புலி படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார்.

பண்டிகை தினத்தில் கூட வேலை பார்த்த படக்குழுவினர் 265 பேருக்கு விஜய் தங்க காசு மற்றும் திருப்பதி லட்டு கொடுத்து அசத்தியுள்ளார். விஜய் அளித்த அன்பு பரிசை பார்த்து படக்குழுவினர் நெகிழ்ந்துவிட்டனர்.

புலி படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். அவர் படத்தில் வரும் முதல் பாடலுக்கான ரெக்கார்டிங்கை முடித்ததும் அவரது இசையில் அசந்த தயாரிப்பாளர்கள் அவருக்கு தங்க மோதிரத்தை பரிசாக அளித்துள்ளனர்.

 

Post a Comment