சேரனின் சினிமா டு ஹோம் திட்டம் மீண்டும் தள்ளி வைப்பு.. பிரமாண்ட விழா எடுத்து ஆரம்பிக்க முடிவு!

|

சென்னை: சேரன் தொடங்கியுள்ள சினிமா டு ஹோம் திட்டத்துக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முழு ஆதரவு தெரிவித்துள்ளது.

படங்களை திரையரங்குகளில் வெளியிடும் போதே, நேரடியாக வீட்டுக்கு வீடு டிவிடியாக வழங்கும் திட்டமான சினிமா டு ஹோம் என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

சேரனின் சினிமா டு ஹோம் திட்டம் மீண்டும் தள்ளி வைப்பு.. பிரமாண்ட விழா எடுத்து ஆரம்பிக்க முடிவு!

இத்திட்டத்தின் மூலம் சேரன் இயக்கிய ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படத்தை டி.வி.டி.யாக வீடுகளில் கடந்த பொங்கலன்று விநியோகம் செய்ய ஏற்பாடு நடந்தது. பின்னர் அது 30-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இப்போது மீண்டும் தள்ளிப் போகிறது.

இதுகுறித்து சேரன் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறுகையில், "சினிமா டூ ஹோம் திட்டம் மூலம் ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை படத்தை நாளை (30-ந் தேதி) டி.வி.டி.யாக வீடுகளில் சப்ளை செய்ய இருந்தோம். தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவர் கலைப்புலி தாணு மற்றும் விநியோகஸ்தர்களை நேற்று சந்தித்து இத்திட்டம் குறித்து விளக்கினேன்.

கலைப்புலி தாணு நல்ல முயற்சி என்று பாராட்டினார். தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் பலன் அளிக்கும் திட்டம் என்றும் கூறினார். இரு வாரங்கள் கழித்து நடிகர்- நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினரை அழைத்து பிரமாண்டமாக இந்த திட்டத்தின் தொடக்க விழாவை நடத்தலாம் என்று யோசனை தெரிவித்தார். அதை ஏற்றுக் கொண்டேன்.

நாளை தொடங்க இருந்த இத்திட்டம் கலைப்புலி தாணு வேண்டுகோளுக்கிணங்க தள்ளி வைத்துள்ளேன். விரைவில் நடிகர், நடிகை வைத்து பிரமாண்டமாக இதன் தொடக்க விழா நடத்தப்படும்.

தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட திலையுலகினரின் கூட்டு முயற்சியாக இந்த திட்டம் நிறைவேற்றப்படும்," என்றார்.

 

Post a Comment