ஏகப்பட்ட படங்கள் வருவதால் ஒத்திவைக்கப்பட்டது பொங்கி எழு மனோகரா!

|

நாளை வெளியாகவிருந்த பொங்கி எழு மனோகரா படம், வேறு தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இர்பான், அர்ச்சனா, அருந்ததி, சிங்கம் புலி நடித்துள்ள புதிய படம் ‘பொங்கி எழு மனோகரா'.

இப்படத்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ரமேஷ் ரங்கசாமி என்பவர் இயக்கியுள்ளார்.

காமெடி படமாக உருவாகியுள்ள இப்படம் நாளை வெளியாகவிருந்தது. பத்திரிகையாளர்களுக்கு சிறப்புக் காட்சியும் போடப்பட்டது.

ஏகப்பட்ட படங்கள் வருவதால் ஒத்திவைக்கப்பட்டது பொங்கி எழு மனோகரா!

இந்நிலையில், படம் நாளை வெளியாகாது என்று படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, தயாரிப்பாளர் பரந்தாமன் கூறுகையில், ‘பொங்கி எழு மனோகரா' படத்தை நாளை வெளியிட முடிவு செய்திருந்தோம். இந்தப் படத்தை அதிக திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டோம்.

ஆனால், நாளை ‘இசை', ‘புலன்விசாரணை 2', ‘தரணி', ‘கில்லாடி', ‘டூரிங் டாக்கீஸ்' ஆகிய படங்கள் வெளியாவதால் நாங்கள் எதிர்பார்த்த திரையரங்குகள் கிடைக்கவில்லை. ஆகையால், படத்தை வேறு தேதிக்கு ஒத்திவைத்துள்ளோம். படம் வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்," என்றார்.

 

Post a Comment