சென்னை: கொலவெறி புகழ் அனிருத் அஜீத்தின் அடுத்த படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
கொலவெறி பாடல் மூலம் பிரபலமான அனிருத் கோலிவுட்டில் பிசியான இயக்குனர்களில் ஒருவர். தனுஷ், சிவ கார்த்திகேயன், சிவா படங்களுக்கு இசையமைத்த அனிருத்துக்கு கத்தி மூலம் விஜய் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது.
கிடைத்த வாய்ப்பை அவர் நல்லபடியாக பயன்படுத்திக் கொண்டார். விஜய்யை அடுத்து அஜீத் படத்திற்கு இசையமைக்க விரும்பினார் அனிருத். என்னை அறிந்தால் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை அவர் கைநழுவவிட்டார்.
இந்நிலையில் சிறுத்தை சிவா அஜீத்தை வைத்து மீண்டும் இயக்கும் படத்திற்கு அனிருத் தான் இசையாம். இந்த படம் நகரத்து பின்னணியில் எடுக்கப்பட உள்ளதாம். நகரத்திற்கு ஏற்ற துள்ளல் இசையை கொடுக்கவே அனிருத்துக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாம்.
அஜீத் இரண்டு மாதம் பிரேக் எடுத்த பிறகு சிவாவின் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment