கப்பல் என்ற காமெடிப் படம் தந்த கார்த்திக் ஜி கிரீஷுடன் அடுத்து இணையவிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
கிறிஸ்துமஸ் தினத்தன்று திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘கப்பல்'. இயக்குநர் ஷங்கரின் உதவியாளராக இருந்த கார்த்திக் ஜி.கிரிஷ் இயக்கினார். ஷங்கரே இந்தப் படத்தை வெளியிட்டார்.
இதில் வைபவ் நாயகனாகவும், சோனம் பஜ்வா நாயகியாகவும் நடித்திருந்தார்கள். இப்படம் முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியிருந்தது.
கார்த்திக் கிரீஷின் அடுத்த படத்தில் உதயநிதி நடிக்கப் போவதாக இப்போது செய்திகள் வெளியாகியுள்ளன.
சமீபத்ததில், உதயநிதியை சந்தித்து தனது அடுத்த கதையை கூறினாராம் கார்த்திக் கிரிஷ். கதை பிடித்துப் போகவே உடனே நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம். இந்தப் படமும் காமெடி - காதல் கதைதானாம்.
உதயநிதி நடிப்பில் தற்போது ‘நண்பேன்டா' படம் வெளிவர காத்திருக்கிறது. மேலும் திருகுமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்து வரும் பெயரிடாத படத்திலும், ‘இதயம் முரளி' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
Post a Comment