பாடகர்கள் அதிகம் பேசக் கூடாது - கே ஜே யேசுதாஸ்

|

பாடகர்கள் ரொம்பப் பேசக் கூடாது. பாடுவதோடு நிறுத்திக் கொள்வதுதான் நல்லது, என்றார் கே ஜே யேசுதாஸ்.

கே ஜே யேசுதாஸ் சினிமாவில் பாட ஆரம்பித்து 50 ஆண்டுகள் நிறைவுறுவதையொட்டி அவருக்கு பாராட்டு விழா மற்றும் இசை நிகழ்ச்சி நேற்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடந்தது.

பாடகர்கள் அதிகம் பேசக் கூடாது - கே ஜே யேசுதாஸ்

இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் திரையுலகிலிருந்து பலரும் வந்து கலந்து கொண்டு யேசுதாஸை வாழ்த்தி வணங்கினர்.

இயக்குநர்கள் எஸ் பி முத்துராமன், பாக்யராஜ், பார்த்திரன், பாடகிகள் பி சுசீலா, எஸ்பி ஷைலஜா, சுஜாதா, நடிகைகள் பி சரோஜாதேவி, பூர்ணிமா பாக்யராஜ், ராதிகா, ரேவதி, இசையமைப்பாளர்கள் தேவா, வித்யாசாகர், சங்கர் கணேஷ், பாடலாசிரியர் இயக்குநர் கங்கை அமரன், நடிகர் தனுஷ், அவர் மனைவி ஐஸ்வர்யா உள்பட பலரும் பங்கேற்றனர்.

பாடகர்கள் அதிகம் பேசக் கூடாது - கே ஜே யேசுதாஸ்

விழாவில் ஒவ்வொரு பாடலுக்கு முன்பும் நட்சத்திரங்கள் அவரை வாழ்த்தினர். பதிலுக்கு யேசுதாஸும் பேசினார்.

அவர் பேசுகையில், "பொதுவா பாடகர்கள் அதிகம் பேசக்கூடாது. பாடுவதோடு நிறுத்திக் கொள்வதுதான் நல்லது.

நான் என்னை ஒரு போதும் வித்வானாக நினைத்ததில்லை. இன்னும் கற்றுக் கொண்டிருக்கும் மாணவனாகத்தான் நினைக்கிறேன்.

ஒவ்வொரு அரிசியிலும் ஒருவர் பெயர் எழுதப்பட்டிருக்கும் என்பார்கள். அப்படித்தான் ஒவ்வொரு பாடலும் இன்னாருக்குத்தான் என்று எழுதப்பட்டிருக்கும். எனவே, அந்தப் பாடல் தனக்கு கிடைக்கவில்லையே என்று யாரும் வருத்தப்படத் தேவையில்லை. அவரவருக்கான பாடல் தானாகவே கிடைக்கும்.

அய்யோ இந்தப் பாடல் எனக்கு கிடைக்காமல் போயிடுச்சேன்னு நான் ஒரு நாளும் வருத்தப்பட்டதில்லை," என்றார்.

நிகழ்ச்சியில் யேசுதாஸின் மனைவி பிரபாவும் கலந்து கொண்டார். யேசுதாஸ் மகன் விஜய் யேசுதாஸ் பல பாடல்களைப் பாடினார்.

 

Post a Comment