"நானும் ரவுடி தான்".. நல்லா சத்தமா சொல்லுங்க.. நயன்தாராவுக்கு காது கேக்காது!

|

சென்னை: விஜய் சேதுபதி ஜோடியாக நடித்து வரும் நானும் ரவுடி தான் படத்தில் காது கேளாதவராக நடித்துள்ளாராம் நயன்தாரா.

நாயகனைச் சுற்றி வந்து காதலிப்பது, டூயட் பாடுவது என்பது மட்டுமல்லாமல் வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நயன் தாரா நடித்து வருகிறார். ஸ்ரீராமராஜ்ஜியம், அனாமிகா, ஆரம்பம் உள்ளிட்ட படங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

அந்தவகையில், தற்போது விஜய் சேதுபதி ஜோடியாக நடித்து வரும் நானும் ரவுடி தான் படத்தில் நயன்தாராவிற்கு காது கேளாதவர் கதாபாத்திரமாம். அத்துடன் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சத்திலும் இப்படம் உருவாகிறதாம்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் பெரும்பட்குதி பாண்டிச்சேரியில் படமாக்கப் பட்டுள்ளது.

இது தவிர உதயநிதியுடன் நடிக்கும் நண்பேண்டா படமு, சிம்பு ஜோடியாக நடித்த இது நம்ம ஆளு பட வேலைகளும் முடிந்துள்ளது. இப்படங்கள் விரைவில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இதேபோல், சூர்யா ஜோடியாக மாஸ் படத்திலும், ஜெயம் ரவி ஜோடியாக தனி ஒருவன் படத்திலும், ஆரியுடன் நைட்ஷோ படத்திலும் நயன்தாரா நடித்து வருகிறார். ஒரு மலையாள படத்திலும் அவர் நடிக்கிறார்.

 

Post a Comment