உள்நோக்கத்தோடு லிங்கா மற்றும் ரஜினி பற்றி படுமோசமாகப் பேசுகிறார் சிங்கார வேலன் - டி சிவா

|

சிங்காரவேலனின் பேச்சு மிகவும் மோசமானதாக இருந்தது. அவர் ரஜினி ஸாரை பத்தி பேசினதை நான் வெளிலேயே சொல்ல முடியாது. அந்த அளவுக்கு கேவலமா பேசினார்.

பிறந்து நான்கு நாட்களே ஆன குழந்தையை கொலை செய்ததுபோல் லிங்கா படத்தை ஓடவிடாமல் செய்துவிட்டார். ரஜினியை பற்றி அவதூறாகப் பேசி அவர் மனதையும் நோகடித்துவிட்டார்.

ரஜினி ஸார் நடித்த 150 படங்களில் 145 படங்கள் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளன. இவ்வளவு பெரிய வெற்றியைக் கொடுத்த ஒரே நடிகர் இந்தியாவிலேயே ரஜினி ஸார்தான்.

உள்நோக்கத்தோடு லிங்கா மற்றும் ரஜினி பற்றி படுமோசமாகப் பேசுகிறார் சிங்கார வேலன் - டி சிவா

அதேபோல் தமிழ் சினிமால, ஏன் இந்திய சினிமாலேயே நஷ்டத்தை ஈடுகட்ட பணத்தைத் திருப்பிக் கொடுத்த ஒரே நடிகர் அவர்தான். ‘பாபா', ‘குசேலன்' படத்துல நஷ்டப்பட்ட விநியோகஸ்தர்களை திருப்பிக் கூப்பிட்டு அவங்க சந்தோஷப்படுத்துற மாதிரி ஒரு தொகையைக் கொடுத்து அனுப்பி வைச்சவர் ரஜினி. அவரையே இப்படி பேசினால் எப்படி..?

இந்தப் பிரச்சினையை எப்படி பேசணுமோ அப்படி பேசித் தீர்க்கணும். இதை வெளில சொல்லி இப்படித்தான் பேசணுமா..? நான் திரும்பத் திரும்ப அவங்ககிட்ட சொன்னது, ‘கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. மதன் ஸார் வந்தவுடனே பேசித் தீர்த்துக்கலாம்னு'தான்.. ஆனா சிங்காரவேலன் ஏதோ உள்நோக்கத்தோட தனக்கு புகழும், பெயரும் கிடைக்கணும்னோ என்னவோ இதை யூஸ் பண்ணியிருக்காருன்னு நான் நினைக்கிறேன்.

இவரோட உள் நடவடிக்கையை பார்த்துதான் அவர் உறுப்பினராக இருக்கும் விநியோகஸ்தர்கள் சங்கமே இதில் தலையிட மறுத்துவிட்டது.

 

Post a Comment