மறுபடியும் பர்ஃபெக்ஷனிஸ்ட் படத்தின் ரீமேக்கில் இவரா?

|

சென்னை: அண்மையில் வெளியான சூப்பர் டூப்பர் இந்தி ஹிட் படத்தின் தமிழ் ரீமேக்கில் தமிழகத்தின் முதல்வர் பதவிக்கு ஆசைப்படும் நடிகர் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தின் முதல்வர் ஆக ஆசைப்பட்டு காய் நகர்த்தி வரும் அந்த நடிகர் பிரமாண்ட இயக்குனர் முதல் முறையாக செய்த ரீமேக் படத்தில் நடித்தார். பிரமாண்ட இயக்குனர் இந்தியில் சூப்பர் ஹிட்டான பர்ஃபெக்ஷனிஸ்ட் நடிகர் படத்தை தமிழில் இந்த நடிகரை வைத்து ரீமேக் செய்தார்.

மறுபடியும் பர்ஃபெக்ஷனிஸ்ட் படத்தின் ரீமேக்கில் இவரா?

இந்தி படத்துடன் ஒப்பிடுகையில் தமிழில் நடிகரின் நடிப்பு அந்த அளவுக்கு இல்லை என்று பலர் விமர்சனம் செய்தனர். இந்நிலையில் கடந்த மாதம் ரிலீஸான சூப்பர் டூப்பர் இந்தி ஹிட் படத்தை பிரமாண்ட இயக்குனர் பார்த்துவிட்டு அதை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

இயக்குனர், பர்ஃபெக்ஷனிஸ்ட் நடிகர் ஆகியோரின் பணியை அவர் மனம் திறந்து பாராட்டியுள்ளார். இந்நிலையில் பிரமாண்ட இயக்குனர் அந்த இந்தி படத்தை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளாராம். மேலும் முதல்வர் பதவிக்கு ஆசைப்படும் நடிகரை அணுகி படத்தை பார்க்குமாறும் தெரிவித்துள்ளாராம்.

இதனால் பிரமாண்ட இயக்குனர் அந்த நடிகரை வைத்து இந்தி படத்தை தமிழில் ரீமேக் செய்வார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியில் நடிப்புக்கு பெயர் போன பர்ஃபெக்ஷனிஸ்ட் நடித்தார். படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றே பர்ஃபெக்ஷனிஸ்டின் அருமையான நடிப்பு தான்.

இந்நிலையில் அதை தமிழில் இந்த நடிகரை வைத்து ரீமேக்கா...?

 

Post a Comment